Saturday, August 15, 2009
எங்கையோ சுட்டவை-3
Posted on 6:34 PM by கதம்பம் வலைப்பூ
நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகையழகு
அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாது
பாடு படுவதுதான்
என்னைரசிக்க வைக்கிறது
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்
உன்னைத் தேடி
கிறுக்கியகிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்காட்டிக்
கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன
அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்
நன்றி : யாழ் அகத்தியன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Response to "எங்கையோ சுட்டவை-3"
//நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்
//
அதிகமாக ரசித்தேன்
Post a Comment