Sunday, August 9, 2009
எங்கையோ சுட்டவை-காசியானந்தனின் உணர்வின் வரிகள்
Posted on 8:44 AM by கதம்பம் வலைப்பூ
சுனாமி
கடற்கரை மணல்
திரும்பிப்பார்த்தேன் காணவில்லை
சுவடுகள்.......
உலகமைதி
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள். போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.
முரண்
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே!பன்றியே!குரங்கே!
கூண்டு
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம் கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்
கொலை
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு... விரியுமுன்பே பறித்து இனறவனுக்கு அர்ச்சனை செய்கிறான் நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு
கொடை
தங்க வளையலைக்கழற்றி போராளியிடம் தந்தாள் செலவுக்குவைத்துக்கொள் உங்களில் பலருக்கு கைகளே இல்லை எனக்கு எதுக்கு வளையல்
மண்
என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே! என் மண்ணை எங்கே புதைப்பாய்?
திமிர்
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய் நாய் என்றால் மனிதன்
சாமி
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமிஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்
தாஜ்மஹால்
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய் காதலை புதைத்த இடம் காட்டு எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?
எங்கையோ சுட்டவை தொடரும்.............
Subscribe to:
Post Comments (Atom)
1 Response to "எங்கையோ சுட்டவை-காசியானந்தனின் உணர்வின் வரிகள்"
தேர்ந் தெடுத்த வரிகளுக்கு மிக அருமையான படங்கள் இணைத்
துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
Post a Comment