Wednesday, August 12, 2009

சங்க காலத்தில் வட்டத்தின் பரப்பை கண்டுபிடிக்க சூத்திரம்

Posted on 11:33 AM by கதம்பம் வலைப்பூ


செய்யுளில் கணிதம் சங்க காலத்தில் கணிதத்திலும் நம் முன்னோர்
.....வட்டத்தின் பரப்பை கண்டு பிடிக்க சூத்திரம் :

வட்டத் தரை கொண்டு
விட்டத் தரை காண
சட்டென்று தோன்றும் குழி-
எழுதியவர் பெயர் தெரியவில்லை.
வட்டத்து அரை - அதாவது சுற்றளவில் பாதி ( 1/2 * circumfrence= pi*r)
கொண்டு - அந்த அளவைக் கொண்டு
விட்டத்து அரை - ஆரை ( 1/2 * diameter = r)
காண - 'காண' என்பது பெருக்கலைக் குறிக்கிறது
சட்டென்று தோன்றும் குழி - குழியின் அளவு,அதாவது பரப்பளவு கிடைக்கும்.
வட்டத்து அரையை விட்டத்து அரையால் பெருக்க பரப்பளவு கிடைக்கும்.

வட்டத்தின் பரப்பளவு = வட்டத்து அரை * விட்டத்து அரை
= (1/2 * circumfrence) * (1/2 * diameter)
= (π*r) * (r)
= π*r²
இதன் மூலம் π(pi) என்ற அளவைப் பயன்படுத்தாமலேயே வட்டத்தின் பரப்பை நம் முன்னோர் கணக்கிட்டனர் என்பது தெளிவாகிறது.

நானும் எதோ ஒரு புத்தகத்திலை வாசிச்சனான் பாருங்கோ......
ஆனால் எனக் என்றால் கணிதம் மட்டம்
விளங்கிட்டுதோ???? 0000000000000000000000000000
இன்னும் விளங்கலையோ??? சுழியம் (பூச்சியம்)
இப்ப விளங்கியிருக்குமே.........


3 Response to "சங்க காலத்தில் வட்டத்தின் பரப்பை கண்டுபிடிக்க சூத்திரம்"

.
gravatar
Unknown Says....

நல்ல இடுகை.கணிதம் பற்றி மேலும் இடுகைகள் பார்க்க என் வலைத்தளம் வாங்க.நன்றி.