Wednesday, August 12, 2009

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும்-1


பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான பொருட்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதாக பன்னெடுங்காலங்களாக செய்திகள் பரவிவந்தாலும் 1947ம் ஆண்டுக்குப் பிறகுதான் இதைப்பற்றிய அதிகமான செய்திகள் உலகின் பார்வைக்கு வரத் துவங்கின.

1947ம் ஆண்டில் அமெரிக்காவில் வானில் பறக்கும் தட்டைக் கண்டதாக வந்த செய்திக்குப் பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்களும் அத்தகைய பொருட்களைக் கண்டதாக வெளியில் கூறத் துவங்கினர். இன்னும் பலர் பார்த்திருந்தால் கூட வெளியே சொன்னால் ஏளனம் செய்வார்களோ என எண்ணி வெளியே சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். உலகம் முழுதும் UFO என்றாலே வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குள் நுழைந்துள்ள ஒரு வான ஊர்தி என்றே நம்பினார்கள் - பெரும்பாலும் பறக்கும் தட்டுக்கள் என்று அவற்றைக் குறிப்பிட்டார்கள்.

இன்று நேற்றல்ல - மிகப்பழைய காலம் முதலாகவே இதுபோன்ற அபூர்வக் காட்சிகளை வானில் பார்த்ததாகச் செய்திகள் உள்ளன. இவைகளில் பல வழக்கமாக ஏற்படும் வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் போன்று வானவியல் மாற்றங்களாக இருக்கலாம். கி.மு1450ல் ஐந்து மீட்டர் அளவு கொண்ட, சூரியனை விடப் பிரகாசமான ஒளிவட்டங்களை வானில் கண்டதாகவும் அவை பல நாட்கள் தோன்றியதாகவும் பின்னர் உயரே சென்று மறைந்ததாகவும் செய்திகள் உள்ளன. ரோமானிய சிரியர் ஜூலியஸ் ப்சிக்வின்ஸ் கி.மு 99ம் ஆண்டு சூரியன் மேற்குதிசையில் மறையும் வேளையில்ஒரு உருண்டையான பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 1561ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூரம்பெர்க் நகரில் ஏதோ ஒன்றுக்கொன்று கடும் சண்டையிட்டுக் கொள்வது போல வானில் இங்கும் அங்கும் பறந்து செல்லும் பல்வேறு வினோதப் பொருட்கள்- ஒரு பெரிய சிலிண்டரிலிருந்து பல கோளங்களும் தட்டுக்களும் (பீரங்கியிலிருந்து குண்டுகள் பாய்வதுபோல்) வெளிவந்தனவாம். இவையெல்லாம் என்னவோ விபரீதமாக நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவோ கெட்ட சகுனமாகவோஅல்லது தேவதைகள் வானில் காட்சி அளிப்பதாகவோ கருதப்பட்டு வந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் இன்றும் கூட பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாகச் சொல்லப்படும் செய்திகள் போன்றவைதான் என்று UFO பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

1870ம் ஆண்டு சிலி நாட்டிலுள்ள கோபியபோ நகரில் ஜான் மார்டின் என்ற விவசாயி
வானில் கருப்பான உருண்டையாக பலூன் போல் காட்சியளித்த பொருள் ஒன்று படுவேகமாகப் பறந்து செல்வதைப் பார்த்ததாக உள்ளூர் தினசரி ஒன்று குறிப்பிட்டிருக்கிறது. 1882ம் ஆண்டில் கிரீன்விச் அப்செர்வேடரியின் குறிப்புகளில் "'ஒரு வட்ட வடிவான' 'அரிதான வானுலக விருந்தாளி' யைப் பற்றிய் குறிப்பு காணப்படுகிறது. இது எரிநட்சத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் கூறியது. இந்த அதிசய நிகழ்வை ஐரோப்பாவைச் சேர்ந்த இன்னும் பல வானசாஸ்திர ஆராய்ச்சியாளர்களாலும் கண்டதாகச் சொன்னார்கள். 1904ம் ஆண்டு அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த மூவர் தாங்கள் வானில் கண்ட அதிசயத்தைப் பற்றிக் கூறினர். மூன்று பிரகாசமான சிவந்த உருண்டையான சாதனங்கள் அணிவகுத்து மேகங்களுக்குக் கிழே சென்றதாகவும் பின்னர் பாதை மாறி விண்ணை நோக்கிப் பறந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அவை நம் பார்வையில் தெரியும் சூரியனை விட ஐந்து அல்லது நூறு மடங்கு பெரியவையாய் இருந்தனவாம்.

1926ம் ஆண்டு சூரியனைவிடப் பெரிய அளவில் மிகுந்த பிரகாசமாக கோளவடிவத்தில் ஒரு சாதனம் வெகுவேகமாகச் சென்றதாக ஒரு செய்தி. 1942ல் கலிபோர்னியாவில் ஒரு அடையாளம் தெரியாத விமானம் வானிலேயே நிலைத்து நின்றதாக வேறு ஒரு செய்தி என்று இப்படிப் பல செய்திகள் உலவின. இதில் கலிபோர்னியா சம்பவம் "லாஸ் ஏன்ஜலீஸ் யுத்தம்" என்று சொல்லப்பட்டது.

இதே நேரத்தில் ஸ்கான்டினேவியன் நாடுகளில் இதே போன்று அடையாளம் தெரியாத விமானங்களைக் கண்டதாக கிட்டத்தட்ட 2000 செய்திகள் வந்தன. இது தவிர •பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, கிரேக்க நாடுகளிலிருந்தும் தகவல்கள்- ஜெர்மனியில் சண்டையின் போது கைப்பற்றிய ராக்கெட்டுகளில் ரஷ்யா நடத்திய சோதனைகள்தான் இவை எனக் கருதப்பட்டதால் இந்த நிகழ்வுக்கு "ரஷ்யப் பொழிவு" என்று பெயர் சூட்டினர். ஆனால் உண்மையில் ரஷ்யர்கள் நடத்திய சோதனையல்ல என்று பின்னால் தெரிந்தது. இன்னும் இந்த நிகழ்விற்கான சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இத்தகைய விமானங்களில் கிட்டத்தட்ட 200 விமானங்களை ரேடாரிலும் காண முடிந்தது. எனவே அந்தச் செய்திகள் உண்மையானவையாகவே இருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. மற்றவை யாவும் எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் இவற்றைப் பார்த்துவிட்டுத் தவறாகப் புரிந்துகொண்டதால் இருந்திருக்கலாம்.

(பறக்கும் தட்டுகளின் பயணம் தொடரும் )

நன்றி : இணையம்,நண்பர்கள்,நூலகங்கள்

சங்க காலத்தில் வட்டத்தின் பரப்பை கண்டுபிடிக்க சூத்திரம்


செய்யுளில் கணிதம் சங்க காலத்தில் கணிதத்திலும் நம் முன்னோர்
.....வட்டத்தின் பரப்பை கண்டு பிடிக்க சூத்திரம் :

வட்டத் தரை கொண்டு
விட்டத் தரை காண
சட்டென்று தோன்றும் குழி-
எழுதியவர் பெயர் தெரியவில்லை.
வட்டத்து அரை - அதாவது சுற்றளவில் பாதி ( 1/2 * circumfrence= pi*r)
கொண்டு - அந்த அளவைக் கொண்டு
விட்டத்து அரை - ஆரை ( 1/2 * diameter = r)
காண - 'காண' என்பது பெருக்கலைக் குறிக்கிறது
சட்டென்று தோன்றும் குழி - குழியின் அளவு,அதாவது பரப்பளவு கிடைக்கும்.
வட்டத்து அரையை விட்டத்து அரையால் பெருக்க பரப்பளவு கிடைக்கும்.

வட்டத்தின் பரப்பளவு = வட்டத்து அரை * விட்டத்து அரை
= (1/2 * circumfrence) * (1/2 * diameter)
= (π*r) * (r)
= π*r²
இதன் மூலம் π(pi) என்ற அளவைப் பயன்படுத்தாமலேயே வட்டத்தின் பரப்பை நம் முன்னோர் கணக்கிட்டனர் என்பது தெளிவாகிறது.

நானும் எதோ ஒரு புத்தகத்திலை வாசிச்சனான் பாருங்கோ......
ஆனால் எனக் என்றால் கணிதம் மட்டம்
விளங்கிட்டுதோ???? 0000000000000000000000000000
இன்னும் விளங்கலையோ??? சுழியம் (பூச்சியம்)
இப்ப விளங்கியிருக்குமே.........

Tuesday, August 11, 2009

குழந்தைக்கு காய்ச்சலா... முத்தமிடுங்கள்!


அழுகை

பல்வேறு குழந்தை நல நிபுணர்கள், குழந்தைகளின் அழுகைகளை ஆராய்ச்சி செய்து, எப்போது, எதற்காக குழந்தை அழுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு குழந்தை அழும்போது அம்மா செல்லமாகக் கொஞ்சினால் குழந்தை தற்காலிகமாக உடனே அழுகையை நிறுத்திவிடுகிறதாம். அதற்குள் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.

தூக்கம்

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்குத் தூக்கத்தை வரவழைப்பதற்காக காரில் அல்லது ஏதாவது வாகனத்தில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது, பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் ஒரு பழக்கமாக மாறிவிடக்கூடும். மாறாகக் குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.

பாலூட்டுதல்

குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.

குழந்தையைத் தூக்குதல்

குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் `அறிவுரை' சொல்வார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் `ரிப்ளெக்ஸ்' திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது.

ஆடை அணிவித்தல்

தங்கள் குழந்தையைக் கதகதப்பாக வைத்திருப்பதற்காக அம்மாக்கள் அவற்றுக்கு கை, கால் தெரியாமல் ஆடைகளை மாட்டிவிடுகிறார்கள். அதற்குப் பதிலாக காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பரா மரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும்.

மெதுவாகத் தட்டுதல்

குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் `பாசிட்டிவ்'வான பலனைத் தருகிறதாம்.

மஞ்சள் காமாலை

குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே மஞ்சள் காமாலை பாதிப்பு அபாயம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிப்பார்கள். அப்போது குழந்தையின் சருமம் வெளிர் மஞ்சளாகலாம். ரத்தத்தில் சேரும் `பிலிரூபினால்' தேகம் இப்படி மஞ்சளாக மாறுகிறது. குழந்தையின் மலம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது என்றால், ரத்தத்தில் உள்ள `பிலிரூபினை' உங்கள் குடல் வெளியேற்ற முயல்கிறது என்று அர்த்தம்.

வெப்பநிலையைச் சோதித்தல்

குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கிறது என்றால், பெரியவர்களைப் போல நெற்றியைத் தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். நனைத்துப் பிழிநëத துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தலாம்.

குளியல்

இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். அப்போது, பெரியவர்கள் அல்லது கணவரின் உதவியை நாடலாம்.

இடுப்பு ஆடை

குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன `டயாப்பர்கள்' வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம்


நன்றி: தமிழ்மன்றம்

Monday, August 10, 2009

எங்கையோ சுட்டவை தொடர்ச்சி-2-காசியானந்தனின் உணர்வின் வரிகள்-

பாடம்

புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி





மாவீரன்

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்




நிழல்
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்




தளை

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர





கோயில்

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.









ஞானம்

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில்
பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்









நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி






நிமிர்வு
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?







மந்தை
மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ
என்றேன் கைதட்டினான்

மானம்
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு







மனிதன்
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று
என்கிறான்
இப்படியாக மனிதன்....



போர்
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.




இனவெறி
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்...
மனிதர்களையே காணவில்லையே.






எங்கையோ சுட்டவை தொடரும்.............


Sunday, August 9, 2009

எங்கையோ சுட்டவை-காசியானந்தனின் உணர்வின் வரிகள்





சுனாமி

கடற்கரை மணல்
திரும்பிப்பார்த்தேன் காணவில்லை
சுவடுகள்.......











உலகமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள். போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.










முரண்

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே!பன்றியே!குரங்கே!



கூண்டு

விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம் கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்

















கொலை

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு... விரியுமுன்பே பறித்து இனறவனுக்கு அர்ச்சனை செய்கிறான் நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு








கொடை


தங்க வளையலைக்கழற்றி போராளியிடம் தந்தாள் செலவுக்குவைத்துக்கொள் உங்களில் பலருக்கு கைகளே இல்லை எனக்கு எதுக்கு வளையல்









மண்

என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே! என் மண்ணை எங்கே புதைப்பாய்?









திமிர்

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய் நாய் என்றால் மனிதன்






சாமி

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமிஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்






தாஜ்மஹால்

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய் காதலை புதைத்த இடம் காட்டு எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?







எங்கையோ சுட்டவை தொடரும்.............

Monday, August 3, 2009

சிறப்பாக பிளாக்(Blog) அமைய சில யோசனைகள்


Blogs எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையத்தளம் தருகின்றது


http://www.sitesketch101.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை:

Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன.
Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.

Graphics: இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது.

Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான்.

Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ, இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன.

Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.

இணையத்தளச்சுட்டி: http://www.sitesketch101.com/

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

Sunday, August 2, 2009

வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க!!! :ஒரு மென்பொருள்


சமீப காலமாக வானியல் பற்றிய ஆய்வுகள் அதிகரித்துள்ளன.
அத்தகைய வானியல் பற்றிய தகவல்கள் பல இடங்களில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன்.வானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

முதலில் Stellarium 0.10.2 மென்பொருள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இதை நிறுவிக் கொள்ளலாம்.

இதன் பிறகு வானத்தில் நட்சத்திர மண்டலங்களை 12 இராசி மண்டலங்கள் அதன் பிற்பாடு 88 நட்சத்திர மண்டலங்கள், 8 கிரகங்கள் என பார்ப்போம்.

கிரகங்களைப் பற்றி இதைப் படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

வானம் மொத்தம் 360 பாகைகளாக இருக்கிறது அல்லவா? இந்த 360 பாகைகளை 12 ஆக 30 பாகைகள் ஒரு இராசி எனப் பிரித்து இருக்கிறார்கள். (30 மில்லி ஒரு பெக்(peg) என்பதை குடிமகன்களும், 30 மில்லி ஒரு அவுன்ஸ்(ounces) என வெறும் மகன்களும் நினைவில் கொள்ளலாம்).இந்தப் பகுதியில் உள்ள பெரிய நட்சத்திரங்களின் வடிவத்தைப் பொறுத்து அவற்றிற்கு பெயரிட்டு இருக்கின்றனர்.

மேச ராசி

ரிசப ராசி:

மிதுன ராசி

கடகராசி

சிம்மராசி

கன்னிராசி

துலாராசி

விருச்சிகராசி

தனுசுராசி :

மகரராசி

கும்பராசி

மீனராசி

சரி இப்போ எப்படி இந்த ராசிகளை அடையாளம் காண்பது? சந்திரனை வைத்துதான்http://en.wikipedia.org/wiki/Nakshat...a_descriptions இங்கே நட்சத்திர அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நமது நாட்காட்டியில் அன்று என்ன நட்சத்திரம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் அருகே சந்திரன் இருக்கும்.
ஆக இதைக் கொண்டு இருபத்தேழு நட்சத்திரங்களையும்.மற்றும் 12 இராசிகளையும் வானத்தில் அடையாளம் காணலாம். இதே போல Stellarium 0.10.2 மென்பொருள் மூலமாக இந்த நட்சத்திர மண்டலங்களை அடையாளம் காணலாம். மொட்டை மாடியில் இனி தூங்கப் போறவங்க எல்லாம் கையைத் தூக்குங்க..இந்த விவரங்களைக் கொண்டு 5கிரகங்கள் மற்றும் 27நட்சத்திரங்கள் 12இராசிகளை அடையாளம் கண்டு பிடியுங்கள்....


நன்றி:தமிழ்மன்றம்

Saturday, August 1, 2009

குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள்



கம்ப்யூட்டர்கள் இன்று நம் வாழ்வின் ஓர் அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. கம்ப்யூட்டரின் அடிப்படையையும் அதனை இயக்குவதனையும் தெரிந்து கொள்வது இன்றியமையாத ஓர் திறனாக அமைந்துவிட்டது. எனவே குழந்தைகள் கற்கத் தொடங்கியவுடன் கம்ப்யூட்டர் இயக்கத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வது எப்போதும் முறையோடு தொடங்கிச் சீராகச் செல்லவேண்டும். அப்போதுதான் ஆழமாக எதனையும் புரிந்து கற்றுக் கொள்ள முடியும். இங்கு குழந்தைகள் அவசியம் கற்றுக் கொள்ளக் கிடைக்கும் இலவச கம்ப்யூட்டர் புரோகிராம்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.


1.Tux of Math Command: அனைத்து அறிவியலுக்கும் கணிதமே அடிப்படை என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்கள் கற்றலின் தொடக்கத்திலேயே கணிதத்தைக் கற்றுக் கொடுத்தால் கணிதத்தின் அடிப்படை குறித்த நல்ல அறிவு பெறுவதுடன் தொடர்ந்து அறிவியலின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும். இந்த புரோகிராம் அதனைத் தருகிறது. சில விளையாட்டுக்கள் மூலம் முதலில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலை இது கற்றுக் கொடுக்கும் வழி சிறப்பாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஓர் எரிநட்சத்திரம் பூமியை நோக்கி வருகிறது. அதில் கணக்கு ஒன்று காட்டப்படுகிறது. கீழே ஐஸ் கட்டி வீடும் அதனுள் பெங்குவின் பறவைகளும் உள்ளன. குழந்தை தான் பெங்குவின் பறவை. எரி நட்சத்திரம் பூமியை நெருங்கும் முன் இந்த பெங்குவின் அதனை அழிக்க வேண்டும். எப்படி அழிக்க முடியும்? அந்த எரிநட்சத்திரத்தில் உள்ள கணக்கிற்கு விடை தர வேண்டும்.இந்த வகையில் கணிதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எந்தக் குழந்தைக்குத்தான் இது மகிழ்ச்சியைத் தராது! அதே சமயத்தில் கணிதத்திலும் திறன் வளரும்! இந்த புரோகிராமினைப் பெற http://tux4kids.alioth.debian.org/tuxmath/download.php என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.


2.Crayon Physics: கணிதத்தை அடுத்து அறிவியலுக்குச் செல்லலாம். கிரேயான் பிசிக்ஸ் என்ற பிரபலமான விளையாட்டிற்கான புரோகிராம் அறிவியல் கற்றுக் கொள்வதில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தருகிறது. இந்த விளையாட்டில் ஒரு பந்தினை நட்சத்திரக் குறியிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனைக் கொண்டு செல்ல பல வழிகள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அறிவியலின் அடிப்படைகளைக் கற்றுத் தருகின்றன. இயற்பியல் கோட்பாடுகளின் எளிய விதிகளை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த விளையாட்டு ஒரு இரண்டு பரிமாணக் காட்சியில் காட்டப்படுகிறது. பிசிக்ஸ் பிரிவின் gravity, momentum, inertia, mass, friction, kinetic and potential energy எனப் பல கோட்பாடுகள் விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. எந்த லெவலில் குழந்தைகள் விளையாடலாம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நன்கு கற்று அறிந்தவர்கள் வெறும் விளையாட்டாகவும் இதனை எடுத்துக் கொண்டு பொழுதைப் போக்கவும் செய்திடலாம். ஆனால் விளையாடுகையில் சிந்திக்கும் திறனை நன்கு வளர்க்கும் விதத்தில் இந்த கேம் வடிவமைகக்ப்பட்டுள்ளது. இந்த கேம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே விளையாட முடியும். இதனைப் பெற http://crayonphysics.en.softonic.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.




3. Kiran’s Typing Tutor: கம்ப்யூட்டரை எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டுமானால் அதன் கீ போர்டை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஆங்கில டைப்பிங் திறன் கொண்டிருக்க வேண்டும். கிரன் குமார் என்பவர் தயாரித்த Kiran’s Typing Tutor என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. டைப்பிங் கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ள புரோகிராம் இது. இதனை எளிதாக டவுண்லோட் செய்திடும் வகையில் சிறிய அளவில் இருக்கிறது. விண்டோஸ் சிஸ்டத்தில் எந்த பதிப்பிலும் இதனைப் பயன்படுத்தலாம். http://www.kiranreddys.com/ என்ற முகவரி உள்ள தளத்தில் கிடைக்கிறது. தொடக்கம் முதல் டைப்பிங் செய்வதனை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுக்கிறது. எந்த வயதுக் காரர்களும் இதனைப் பயன்படுத்தி டைப்பிங் கற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஓரளவிற்கு டைப்பிங் கற்றுக் கொண்டவர்கள் இதில் உள்ள உயர்நிலைப் பாடங்களைக் கற்று தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.இந்த புரோகிராம் தரும் இன்டர்பேஸ் வண்ணமயமாக இருப்பதால் குழந்தைகள் இதன் மூலம் பழக விரும்புவார்கள். விரல்களை எங்கு வைத்து எப்படி அழுத்த வேண்டும் என்பது திரையில் படமாகவே காட்டப்படுவது குழந்தைகளை நிச்சயம் கவர்ந்திழுக்கும். பழகப் பழக உங்கள் டைப்பிங் திறன் எவ்வளவு துல்லியமானது, நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களால் டைப் செய்திட முடிகிறது என்றெல்லாம் காட்டப்படுகிறது. உங்களுடைய டைப்பிங் திறன் முன்னேற்றம் ஒரு வரைபடமாகக் காட்டப்படுகையில் எந்தக் குழந்தைக்கும் அது ஒரு நல்ல தூண்டுகோலாகத்தானே இருக்கும். மேலும் இதன் மூலம் ஒரு குழந்தை தன் பிழைகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவும் முடியும். இந்த புரோகிராமினை இறக்கி இன்ஸ்டால் செய்து உங்கள் குழந்தை டைப்பிங் கற்றுக் கொள்வதனைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.




4. Lego Digital Designer: இது கிட்டத்தட்ட ஒரு சாப்ட்வேர் எனலாம். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பழகும் சாப்ட்வேர் தொகுப்பாக இது நமக்குக் கிடைக்கிறது. Lego Digital Designer என்பது இதன் பெயர். வெகுநாட்களாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருபவர்கள் Lego bricks என்னும் விளையாட்டினை முன்பு விளையாடியிருப்பார்கள். அந்த விளையாட்டு இப்போது மேலும் டிஜிட்டலாகி டிஜிட்டல் செங்கற்களோடு வந்திருக்கிறது. பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் செங்கற்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, உங்கள் புத்திக் கூர்மையின் மூலம் தரப்பட்டுள்ள வெவ்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.அடிப்படையில் இது ஒரு CAD சாப்ட்வேர் போலத்தான். ஆனால் குழந்தைகள் இதில் விளையாடுகையில் மிகவும் குதூகலத்துடன் சவால்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் விளையாடுவதனைப் பார்க்கலாம். அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரையத் தட்டிவிட்டு தாங்கள் விரும்பும் வகையில் வடிவங்களை அமைக்கலாம். இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட 28 எம்பி அளவிலான பைல் http://ldd.lego.com/download என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கென தனித் தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.



5.Scratch: இந்த புரோகிராம் எட்டு அல்லது பத்து வயதுக்கு மேலான சிறுவர் சிறுமியர்களுக்கானது. இது ஒரு புரோகிராமிங் மொழி. விசுவல் புரோகிராமிங் லாங்குவேஜ் வழியாக குழந்தைகளுக்கு புரோகிராமிங் குறித்த அடிப்படைகளைக் கற்றுத் தருகிறது. இதனைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் சிறுவர்கள் தாங்களாகவே கம்ப்யூட்டருக்கான கேம்ஸ்களை உருவாக்க முடியும். வீடியோ மற்றும் மியூசிக் புரோகிராம்களையும் வடிவமைக்க முடியும். இது ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்குவதைப் போல இயங்குகிறது. வண்ணங்களில் இயங்கும் இதன் தன்மை நம்மை ஈர்க்கிறது. புரோகிராமிங்கிற்குத் தேவையான அனைத்தும் பல்வேறு பேனல்களில் தரப்படுகிறது. அவற்றிலிருந்து தேவையானதை எடுத்துப் போட்டு நாம் விரும்புவதனை உருவாக்கலாம். புரோகிராமிங் மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு உங்கள் குழந்தைகளுக்குச் சரியான தொடக்கத்தினை இந்த புரோகிராம் கொடுக்கிறது. இந்த புரோகிராமும் விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களுக்கெனத் தரப்படுகிறது. இதனை பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://scratch.mit.edu/
நன்றி:கம்ப்யூட்டர்மலர்.

Friday, July 31, 2009

சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.


போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.

நன்றி:கம்ப்யூட்டர்மலர்.

இலவச சிடி ரிப்பர்(CD Ripper)


கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.
பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும். பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.