Friday, July 31, 2009

சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.


போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.

நன்றி:கம்ப்யூட்டர்மலர்.

இலவச சிடி ரிப்பர்(CD Ripper)


கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.
பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும். பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.

கதம்பம் வலைப்பூ ஒரு அறிமுகம்

வணக்கம்.....வாருங்கோ. எப்படி எல்லாரும் சுகமாக இருக்கிறியளோ?எனக்கும் புதிசா ஒரு ஆசை வந்தது பாருங்கோ. புதிசாக ஏதாவது எழுத வேணுமென்று. சரி என்று "கதம்பம் வலைப்பூ" என்று பெயரை வைத்து சும்மா எழுதுவம் என்று வெளிக்கிட்டனான் பாருங்கோ.கதம்பம் என்றாலே என்னவென்று தெரியாதவன் எல்லாம் எழுத வெளிக்கிடுகினம் என்ற உங்கடை ஆதங்கம் எனக்கு புரியுது பாருங்கோ இருந்தும் கம்பன் சொன்னது போல பெரிய பாற்கடல் ஒன்றை சிறிய பூனை ஒன்று நக்கிக்குடிக்க ஆசைப்படுவது போல நானும் இந்த கதம்பம் என்ற பெரிய கடல் ஒன்றுக்கு வாறன் உங்கடை ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரி தொடங்கிறன்....